அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஈரான் தலைவர் காமேனியின் மனைவி உயிரிழந்தார்

3 மார்ச் 2026, 1:31 AM
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஈரான் தலைவர் காமேனியின் மனைவி உயிரிழந்தார்

தெஹ்ரான், மார்ச் 3: ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மனைவி மன்சூரே கோஜஸ்தே பகர்சாதே, அமெரிக்கா–இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் அவர் இறந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டன.

அயதுல்லா அலி காமேனியும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் கமேனியின் மகள், பேத்தி, மருமகள் மற்றும் மருமகன் ஆகியோரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் மத்திய கிழக்குப் பகுதியில் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தியதுடன், பழிவாங்கும் மோதல்களையும் அதிகரித்துள்ளது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.