கோத்த கினபாலு, பிப். 27: விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், சபா மாநில அரசாங்கம் இந்த ஆண்டு மாநிலத்தில் உள்ள 51 விளையாட்டு சங்கங்களுக்கு ரிம3.1 மில்லியன் மதிப்பிலான ஆண்டு மானியத்தை வழங்கியுள்ளது.
இந்த மானியத்தைப் பெறும் சங்கங்கள் அதனைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும், அமைச்சுக்கு முறையான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சபா இளைஞர் மேம்பாடு, விளையாட்டு முன்னேற்றம் மற்றும் படைப்பாக்கத் தொழில்துறை அமைச்சர் டத்தோ நிஜாம் அபு பக்கர் டிட்டிங்கான் கூறினார்.
இங்கு நடைபெற்ற 2025-ஆம் ஆண்டுக்கான தேசிய மற்றும் அனைத்துலக விளையாட்டு வெற்றி ஊக்கத்தொகை வழங்கும் விழா மற்றும் 2026-ஆம் ஆண்டுக்கான சபா மாநில விளையாட்டு சங்கங்களுக்கான மானியம் வழங்கும் விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.
இதே நிகழ்ச்சியில், 2025-ஆம் ஆண்டில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர்களுக்கு மாநில அரசாங்கம் ரிம807,050 ஊக்கத்தொகையை வழங்கியது.
- பெர்னாமா






