கோத்த கினபாலு, பிப். 25 - நேற்று முதல் பெய்து வரும் தொடர் மழையைத் தொடர்ந்து, இன்று நண்பகல் நிலவரப்படி சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதிய மாவட்டமாக மெம்பாகுட் உருவெடுத்துள்ளது.
இதற்கிடையில், இன்று காலை சிபித்தாங், சூக் மற்றும் பியூஃபோர்ட் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களைத் தற்காலிக நிவாரண மையங்களுக்கு (PPS) மாற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சபா மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் தெரிவித்தது.
மெம்பாகுட், சிபித்தாங் மற்றும் பியூஃபோர்ட் ஆகியவை கோத்த கினபாலுவின் தென்மேற்கில் அமைந்துள்ள சபா மேற்குக் கடற்கரை மாவட்டங்களாகும். அதேவேளையில், சூக் மாநிலத்தின் உள்பகுதியில் உள்ள மாவட்டமாகும்.
இதற்கிடையில், பித்தாஸில் வெள்ள நிலவரத்தில் மாற்றம் இல்லை. இன்று காலை நிலவரப்படி, 861 குடும்பங்களைச் சேர்ந்த 1,695 பேர் இன்னும் ஐந்து தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
-- பெர்னாமா
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதிய மாவட்டம் மெம்பாகுட்
25 பிப்ரவரி 2026, 7:49 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
தாமான் ஸ்ரீ மூடா வெள்ளத் தடுப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்
Media Selangor Team
3 செப்டெம்பர் 2026

national
நேபாளப் பேரிடர்: 25 மலேசிய குடும்பத்தினர் DNA மாதிரிகளை வழங்கினர்
Bernama
3 செப்டெம்பர் 2026

antarabangsa
வெள்ளப் பேரிடர்: பருவநிலை இழப்பீடு கோரும் நேபாள அரசு
Bernama
3 செப்டெம்பர் 2026

antarabangsa
நேபாள வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,220-ஆக அதிகரிப்பு; 4,762 பேர் காணவில்லை
Bernama
3 செப்டெம்பர் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



