விஸ்மா பெர்விராவில் தற்காப்பு அமைச்சின் உயர் மட்ட நிர்வாகத்தினருடன் பிரதமர் அன்வார் சந்திப்பு

25 பிப்ரவரி 2026, 3:11 AM
விஸ்மா பெர்விராவில் தற்காப்பு அமைச்சின் உயர் மட்ட நிர்வாகத்தினருடன் பிரதமர் அன்வார் சந்திப்பு

கோலாலம்பூர், பிப் 25 - பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இங்குள்ள விஸ்மா பெர்விராவில் தற்காப்பு அமைச்சின் (MINDEF) உயர் மட்ட நிர்வாகத்தினருடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.

 சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது காலித் நோர்டின், அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் மற்றும் மலேசிய ஆயுதப் படைகளின் தளபதி ஜெனரல் டத்தோ மாலெக் ரசாக் சுலைமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 மேலும், தற்காப்பு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ லோக்மான் ஹக்கிம் அலி, அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவின் (ICU) தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ சோலேஹுடின் அலியூபி ஜக்காரியா மற்றும் பொதுச் சேவைத் துறையின் (செயல்பாடுகள்) துணைத் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ஷைஃபுல் இப்ராஹிம் ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

 நாட்டின் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஆயத்தநிலை, நிர்வாகத்தை வலுப்படுத்துதல் மற்றும் மலேசிய ஆயுதப் படைகளின் அனைத்து உறுப்பினர்களின் நலன் ஆகிய அம்சங்கள் இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இச்சந்திப்பைத் தொடர்ந்து, இங்குள்ள காலித் பின் அல்-வாலித் பள்ளிவாசலில் தற்காப்பு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த 'இஹ்யா ரமலான்' நிகழ்ச்சியில் அன்வார் பங்கேற்றார். இதில் நூற்றுக்கணக்கான மலேசிய ஆயுதப் படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.

 பின்னர், அங்கு வருகை தந்திருந்தவர்களுடன் அவர் ஜொஹோர் தொழுகையில் ஈடுபட்டார். தொழுகைக்குப் பிறகு, அங்கு கூடியிருந்தவர்களுக்கு அவர் நோன்புக் கஞ்சியை விநியோகித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.