மலேசியாவிற்கு 20 ஆண்டுகள் எண்ணெய், எரிவாயுவை விநியோகிக்க புதின் உறுதி - பிரதமர் அன்வார் தகவல்

21 ஜூன் 2026, 3:30 AM
மலேசியாவிற்கு 20 ஆண்டுகள் எண்ணெய், எரிவாயுவை விநியோகிக்க புதின் உறுதி - பிரதமர் அன்வார் தகவல்

கெப்பாளா பாத்தாஸ்,ஜூன் 21 - ரஷ்யா மற்றும் துர்க்மெனிஸ்தானுடனான ஒத்துழைப்பின் வாயிலாக மலேசியா நீண்ட காலத்துக்கான எரிபொருள் கையிருப்புக்கான உத்தரவாத்த்தைப் பெற்றிருப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

குறைந்தது 20 ஆண்டுகள் மலேசியாவிற்கு எண்ணெய்,எரிவாயு,டீசல் ஆகியவற்றை விநியோகிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

உறுதியளித்திருக்கிறார். அந்நாட்டுக்கான அண்மைய பயணத்தின் போது அந்த உறுதி வழங்கப்பட்டதாக அன்வார் கூறினார்.

மேலும், துர்க்மெனிஸ்தானுக்கான பயணத்தின் போது எண்ணெய்-எரிவாயு துறையில் மிகப் பெரிய வாய்ப்பினை மலேசியா பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த வாய்ப்பின் வாயிலாக, துர்க்மெனிஸ்தானின் உலகின் மிகப் பெரிய எரிவாயு சேமிப்பினை மலேசியா பெறும்.

அங்கிருந்து தோண்டியெடுக்கப்படும் எரிவாயுவைக் கொண்டு சீனா, ஜப்பான் கொரியா ஆகிய நாடுகளுக்கான நாட்டின் எரிவாயு ஏற்றுமதியை அதிகரிக்கவும் முடியுமென்றாரவர்.

நேற்று, கெப்பாளா பாத்தாஸ்-சில் செட்டியா ஃபோண்டைன்ஸ் (Setia Fontaines) தொழிற்துறைப் பகுதியின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது அன்வார் இந்த தகவல்களை வெளியிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.