அம்பாங் ஜெயாவில் பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்பும் தொழில்முனைவோர் தற்காலிக உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்

25 பிப்ரவரி 2026, 1:27 AM
அம்பாங் ஜெயாவில் பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்பும் தொழில்முனைவோர் தற்காலிக உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், பிப். 25 – ஹரி ராயா ஐடில்ஃபித்ரி பண்டிகையை முன்னிட்டு அம்பாங் ஜெயாவில் பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்பும் தொழில்முனைவோர், அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்திடம் (எம்பிஏஜே) தற்காலிக உரிமத்திற்காக விண்ணப்பிக்க இன்னும் கால அவகாசம் உள்ளது.

அனுமதிக்கப்பட்ட விற்பனை காலம் பிப்ரவரி 24 முதல் மார்ச் 25 வரை இருக்கும் என எம்பிஏஜே தெரிவித்துள்ளது.

“தற்காலிக உரிமம் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை www.mpaj.gov.my என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, மெனாரா எம்பிஏஜேவில் உள்ள உரிமக் கவுண்டரில் சமர்ப்பிக்க வேண்டும்,” என்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுவது தகுந்த இடத் தேர்வு மற்றும் மலேசியக் காவல்துறையின் (PDRM) அனுமதி ஆகியவற்றிற்கு உட்பட்டதாக எம்பிஏஜே தெரிவித்துள்ளது.

“மேலும் தகவல்களுக்கு, எம்பிஏஜேவின் உரிமம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு துறையை 03-4285 7344 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்,” எனவும் கூறப்பட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.