மெக்சிகோ கலவரத்தில் எந்த மலேசியரும் பாதிக்கப்படவில்லை – விஸ்மா புத்ரா

24 பிப்ரவரி 2026, 3:20 AM
மெக்சிகோ கலவரத்தில் எந்த மலேசியரும் பாதிக்கப்படவில்லை – விஸ்மா புத்ரா

புத்ராஜெயா, பிப் 24: மெக்சிகோவில் ஏற்பட்டுள்ள கலவரங்களில் எந்த மலேசியரும் பாதிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது.

அங்கு மலேசிய தூதரகம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

மெக்சிகோவில் வசிக்கும் அல்லது பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அபாயம் அதிகமான பகுதிகளை தவிர்க்கவும், உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், ஆபத்து அவசர நிலைகளில் உதவி பெற, மலேசியர்கள் தூதரகத்தில் தங்கள் தகவல்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தூதரக உதவிக்கு, மலேசியர்கள் +52 55 5282 4656 / +52 55 5282 5166 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது mwmexico@kln.gov.my / mex.receptionist@kln.gov.my என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.