கோத்த கினபாலு, பிப் 22: சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 2,160 குடும்பங்களைச் சேர்ந்த 5,141 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அந்த எண்ணிக்கை 1,828 குடும்பங்களைச் சேர்ந்த 4,761 பேர் இருந்தனர்.
பிதாஸ், கோத்த மருடு, பைதான் மற்றும் தவாவ் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் 27 தற்காலிக தங்கும் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் அறிவித்துள்ளது.
தொடர் மழையின் காரணமாக நேற்று இரவு 11.30 மணிக்கு தவாவ் மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பிதாஸில் அதிகபட்சமாக 2,120 பேர் பாதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து கோத்த மருடுவில் (1,929 பேர்), பைதானில் (847 பேர்) மற்றும் தவாவ்யில் (245 பேர்)என பதிவாகியுள்ளது.
நான்கு மாவட்டங்களிலும் 80 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.





