ETS இரயில் பயணங்களுக்கு 30% கழிவுச் சலுகை

19 பிப்ரவரி 2026, 3:54 AM
ETS இரயில் பயணங்களுக்கு 30% கழிவுச் சலுகை

கோலாலம்பூர், பிப் 19 - ETS இரயில் சேவையின் அனைத்து வழித்தடப் பயணங்களுக்கும் KTMB நிறுவனம் கூடுதலாக 10 விழுக்காடு கழிவுச் சலுகையை அறிவித்துள்ளது.

முன்னதாக, சீனப் புத்தாண்டு மற்றும் ரமலான் நோன்பு மாதத் தொடக்கத்தை முன்னிட்டு பிப்ரவரி 18 முதல் 22 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட ETS பயணங்களுக்கு மட்டும் 20 விழுக்காடு கழிவுச் சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அது தற்போது 30 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டதோடு, அனைத்து வழித்தடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டதாக தனது முகநூல் பதிவில் KTMB உறுதிப்படுத்தியது.

சீனப் புத்தாண்டு விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்புவோரின் வசதிக்காக இச்சலுகை வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் பயணத்தை முறையாகத் திட்டமிடுமாறு பயணிகளை KTMB அறிவுறுத்தியுள்ளது.

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.