இவ்வார இறுதியில் கிள்ளான் பள்ளத்தாக்கில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

20 பிப்ரவரி 2026, 7:09 AM
இவ்வார இறுதியில் கிள்ளான் பள்ளத்தாக்கில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

கோலாலம்பூர், பிப் 20 - சீனப் புத்தாண்டு (CNY) கொண்டாட்டங்கள் மற்றும் பள்ளி விடுமுறைகள் முடிவடைவதோடு ரமலான் மாதத்தால், இந்த வார இறுதியில் கிள்ளான் பள்ளத்தாக்கை நோக்கி வரும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், வாகன ஓட்டிகள் தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறு மேற்கு கடற்கரை விரைவுச்சாலை (WCE) கேட்டுக் கொண்டுள்ளது.

இன்று வெளியிட்ட அறிக்கையில், கிள்ளான் பள்ளத்தாக்கை நோக்கி வரும் சாலைகளில் மதியம் முதல் இரவு நேரம் வரை கடும் வாகன நெரிசல் ஏற்படும் என்றும், தினசரி வாகன எண்ணிக்கை 160,000-ஐ தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளதாக WCE தெரிவித்துள்ளது.

வாகன ஓட்டிகள் முன்கூட்டியே திட்டமிட்டு, முடிந்தவரை அதிகாலையிலேயே பயணம் தொடங்குமாறு WCE ஆலோசனை வழங்கியுள்ளது. பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் கடும் நெரிசலைத் தவிர்க்கவும், நிகழ்நேர போக்குவரத்து தகவல்களைப் பெறவும் WCE செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், சாலைப் பயனர்கள் தங்கள் வாகனங்கள் சாலைக்கு ஏற்ற நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும், வேக வரம்புகளைப் பின்பற்றவும், சீட் பெல்ட்களை அணியவும், எச்சரிக்கையுடன் இருக்கவும் WCE வலியுறுத்தியுள்ளது.

அவசரப் பாதை அவசரநிலைகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது; அது மோட்டார் சைக்கிள்களுக்கான தனிப்பாதை அல்ல என்பதும் நினைவூட்டப்பட்டுள்ளது.

மின்சார வாகன (EV) பயனர்கள் பேராக் பகுதியிலுள்ள Trong Toll Plaza மற்றும் Taiping Selatan Toll Plaza, சிலாங்கூர் பகுதியிலுள்ள SAE Toll Plaza மற்றும் Assam Jawa Toll Plaza ஆகிய இடங்களில் அமைந்துள்ள அதிக திறன் கொண்ட சார்ஜிங் நிலையங்களில் வாகனங்களை சார்ஜ் செய்யலாம்.

அவசரநிலைகள் ஏற்பட்டால், பயணிகள் உடனடி உதவிக்காக WCE இன்ஃபோலைனை 1700-81-6600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.