கோலாலம்பூர், பிப் 19: மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் மாட்சிமை தங்கிய பேரரசியார் ராஜா சரித் சோஃபியா ஆகியோர், நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் தங்களின் புனித ரமலான் மாத வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவின் மூலம், அருளும் ஆசீர்வாதங்களும் நிறைந்த இந்த மாதத்தை வழிபாடுகளை அதிகரிக்கவும், ஒற்றுமையை வலுப்படுத்தவும், ஒருவருக்கொருவர் உதவும் உணர்வை வளர்க்கவும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவ்விருவரும் மக்களைக் கேட்டுக்கொண்டனர்.
"நானும் பேரரசியாரும் மலேசியா தொடர்ந்து அருளும் சுபிட்சமும் பெறவும், நாட்டு மக்கள் அனைவரும் நலன், அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழவும் பிரார்த்திக்கிறோம்," என பேரரசர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று முதல் நோன்பைத் தொடங்குகின்றனர்.



