கோலாலம்பூர், பிப். 19 – 2027 கல்வியாண்டில் தங்கள் குழந்தைகளை முதலாம் ஆண்டில் சேர்க்க இதுவரை 26,000-க்கும் மேற்பட்ட 6 வயது பிள்ளைகளின் பெற்றோர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கிடையில், 165,000-க்கும் மேற்பட்ட 7 வயது குழந்தைகளும் முதலாம் ஆண்டிற்குப் பதிவு செய்துள்ளனர் என கல்வித் தலைமை இயக்குநர் அசாம் அமாட் தெரிவித்தார்.
முன்கூட்டியே முதலாம் ஆண்டில் சேர்க்க தங்கள் குழந்தைகள் தயாராக உள்ளனர் என்று நம்பும் பெற்றோர், ஏப்ரல் 1 முதல் நவம்பர் 15 வரை கைமுறையிலும் (manual) விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.
குழந்தையின் தயார்நிலை குறித்து சந்தேகம் இருந்தால், பள்ளி அல்லது மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பெற்றோர் ஆலோசனை பெறலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
2027 கல்வியாண்டில் முதலாம் ஆண்டிற்கான மாணவர் பதிவைப் பெற்றோர் மார்ச் 31 வரை https://idme.moe.gov.my என்ற இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாம்.
அடுத்த ஆண்டு முதல், விருப்ப அடிப்படையில் பாலர் கல்வி 5 வயதிலும், முதலாம் வகுப்பு 6 வயதிலும் தொடங்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.


