ஷா ஆலம், 12 ஜனவரி: நாடு முழுவதும் முதலாம் ஆண்டு மற்றும் படிவம் 1-இல் 800,000-க்கும் அதிகமான மாணவர்கள் இன்று 2026-ஆம் கல்வி ஆண்டைத் தொடங்கியுள்ளனர்.
400,000-க்கும் அதிகமான மாணவர்கள் முதலாம் ஆண்டிலும், அதே எண்ணிக்கையிலான மாணவர்கள் படிவம் 1-இலும் பதிவு செய்துள்ளனர் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடெக் தெரிவித்தார்.
“இந்த ஆண்டு முதலாம் ஆண்டு மற்றும் படிவம் 1-க்கு வரும் குழந்தைகளை நாங்கள் வரவேற்கிறோம்,” என்று இன்று எல்மினா, லாடாங் ரீஜென்ட் சீனப் பள்ளியில் (SJKC Ladang Regent Elmina) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார். முன்னதாக, அந்தப் புதிய தொடக்கப் பள்ளியைப் பார்வையிட்ட ஃபட்லினா, அங்கு இதுவரை 266 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் அந்த எண்ணிக்கை 300-ஆக உயரும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்


