ஆறு வயது குழந்தைகளை முதலாம் ஆண்டில் சேர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து தனியார் பாலர் பள்ளி நடத்துநர்களுடன் கலந்தாலோசிப்பு

13 பிப்ரவரி 2026, 3:24 AM
ஆறு வயது குழந்தைகளை முதலாம் ஆண்டில் சேர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து தனியார் பாலர் பள்ளி நடத்துநர்களுடன் கலந்தாலோசிப்பு

நிபாங் திபால், பிப் 13 - அடுத்தாண்டு ஆண்டு தொடங்கி ஆறு வயது குழந்தைகளை முதலாம் ஆண்டில் சேர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து விவாதிக்க, தனியார் பாலர் பள்ளி நடத்துநர்கள் உடன் கலந்தாலோசிப்பு நடத்தப்பட்டது. புதிய பள்ளி பாடத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏற்ப இது அமைந்தது.

அந்த கொள்கை அமலாக்கம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய பாலர் பள்ளி நடத்துநர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெறுவதற்கு அந்த கலந்தாலோசிப்பு நடத்தப்பட்டதாகக் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

ஆரம்பகாலக் குழந்தைப் பருவக் கல்வியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு படியாக இக்கொள்கை இருப்பதனால் தனியார் பாலர் பள்ளி நடத்துநர்கள், ஒட்டுமொத்தமாக தங்களின் ஆதரவைத் தெரிவித்ததாக ஃபட்லினா குறிப்பிட்டார்.

"அவர்கள் எழுப்பிய பிரச்சனைகள் மற்றும் ஐயங்கள் ஆகியவற்றை அமைச்சு கவனிப்பது அவசியமானது என்று நான் நினைக்கிறேன். இதனால், நாம் ஒன்றாக இணைந்து சிறந்த வழியைக் கண்டுபிடிப்போம்", என்றார் அவர்.

பெர்னாமா

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.