ஷா ஆலம், டிச 4- இன்று அதிகாலையில் இருந்து பெய்த கனமழை மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழையின் காரணமாக, சிலாங்கூரில் உள்ள மூன்று மாவட்டங்களில் ஐந்து நீர்மட்ட அளவீட்டு நிலையங்கள் அபாயக் கட்டத்தைத் தாண்டி அதிகரித்துள்ளன.
நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (JPS) சிலாங்கூரின் Infobanjir அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று காலை 7.15 மணி நிலவரப்படி வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபாயக் கட்டத்தைத் தாண்டிய நீர்மட்ட நிலையங்களாக, சபா பெர்னாம் மாவட்டத்தின் ரிம்பாநீர்ப்பாசனக் கதவு, உலு லங்காட் மாவட்டத்தின் பத்து 12 , பத்து 15 மற்றும் சைரன் Bt 12 சுங்கை செராய் கிராமம், அத்துடன் செப்பாங் மாவட்டத்தின் ஜெண்டெராம் ஹிலிர் ஆகிய இடங்கள் உள்ளன. இதில், Batu 12 மற்றும் Jenderam Hilir நிலையங்களில் நீர்மட்டத்தின் போக்கு உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், உலு லங்காட்டில் உள்ள இரண்டு நிலையங்கள் எச்சரிக்கை கட்டத்தைத் தாண்டிவிட்டன. அவையாவன: பெக்கான் பாங்கி லாமா (Pekan Bangi Lama) மற்றும் Bt 12 சுங்கை செராய் புங் தோய் (Bt 12 Sg Serai Bung Toi (F2)) ஆகும்.
இதுமட்டுமல்லாமல், மேலும் ஏழு நீர்மட்ட நிலையங்கள் விழிப்புணர்வு (Berjaga-jaga) மட்டத்தைத் தாண்டியுள்ளன.
அவையாவன: கோலா சிலாங்கூரில் உள்ள பிந்து ஏயர் இஜோக் (Pintu Air Ijok), கோலா லங்காட்டில் உள்ள புகிட் சாங்காங் (Bukit Changgang), கிள்ளானில் உள்ள பண்டார் கிள்ளான் மற்றும் தாமான் தேசா கெமுனிங், அத்துடன் உலு லங்காட்டில் உள்ள கம்போங் பசீர் , பெக்கான் காஜாங் மற்றும் கம்போங் லெம்பா ஜாயா உத்தாரா, அம்பாங் ஆகியவை ஆகும்.


