ஷா ஆலம், பிப் 13 - இன்று மாலை 6 மணிவரை நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசமான வானிலை கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், சபா, சரவாக் மற்றும் லாபுவான் ஆகிய மாநிலங்களின் நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக மெட்மலேசியா தெரிவித்தது.
மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமாக இடியுடன் கூடிய தீவிர மழை ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக பொழியும் என்று எதிர்பார்க்கப்படும் போது இந்த எச்சரிக்கை வழங்கப்படும் என அத்துறை தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.
இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை என்பது ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகக் கூடிய ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும்.
வானிலை தொடர்பான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளம், சமூக ஊடகங்களைப் வலம் வரலாம். சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு myCuaca செயலியை பதிவிறக்கம் செய்யவும்.


