சுங்கை புவாயா, பிப் 13 - இன்று அதிகாலை சிலாங்கூர், சுங்கை புவாயாவை நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை 438.5 கிலோமீட்டரில், மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் காலை 6.30 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததும், புக்கிட் செந்தோசா தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தனர் என மலேசியா, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை (JBPM) செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
“இரண்டு பெரொடுவா மைவி கார்கள் மற்றும் ஒரு ஹோண்டா ஜாஸ் கார் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் மொத்தம் நான்கு பேர் பாதிக்கப்பட்டனர்.
“அதில் பெரொடுவா மைவி காரிலிருந்து தூக்கி எறியப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது,” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
“பின்னர், காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்,” என்று அஹ்மாட் முக்லிஸ் கூறினார்.


