புது டில்லி, பிப். 13 - வியாழக்கிழமை நடைபெற்ற வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய ஆரம்பக்கட்ட வாக்கு எண்ணிக்கையில் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) வலுவான முன்னிலை வகிக்கிறது.
அதிகாரப்பூர்வ முடிவுகளை வங்கதேச தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
300 இடங்களைக் கொண்ட ஜாதியா சங்க்சாட் (தேசிய நாடாளுமன்றம்) அவையில் பிஎன்பி அறுதிப் பெரும்பான்மையைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய போட்டியாளரான ஜமாத்-இ-இஸ்லாமி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான், தான் போட்டியிட்ட டாக்கா-17 மற்றும் போக்ரா-6 ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார் என்று அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர் காலிதா ஜியா மற்றும் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மான் ஆகியோரின் மகனான 60 வயது தாரிக், நாட்டின் புதியப் பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.
127 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், 60 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.
ஆகஸ்ட் 2024-இல் மக்கள் எழுச்சியின் மூலம் செல்வாக்கற்ற முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 175 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் ஜனநாயகத்தின் புதிய சகாப்தமாக இந்த 13-வது நாடாளுமன்றத் தேர்தல் பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் பிஎன்பி கட்சி வலுவான முன்னிலை வகிக்கிறது
13 பிப்ரவரி 2026, 3:32 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
வங்காளதேசப் பிரதமர் மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்
Shalini Rajamogun
22 ஜூன் 2026

antarabangsa
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் கலெடா ஸியா 80ஆவது வயதில் காலமானார்
Mavitthran
30 டிசம்பர் 2025

national
நெகிரி செம்பிலான் 16ஆவது மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை தொடங்கியது
Shalini Rajamogun
1 ஆகஸ்ட் 2026

national
நெகிரி செம்பிலான் தேர்தல்: பாரிசான் நேசனல் - பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு வெற்றி
Shalini Rajamogun
1 ஆகஸ்ட் 2026

வகைantarabangsa
உங்கள் கருத்து என்ன?



