டாக்கா, டிச 30- வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் கலெடா ஸியா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80 ஆகும்.
செவ்வாய்கிழமை வங்காளதேச தேசியவாத கட்சியான BNP கட்சி இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
ஸியா, வங்காளதேசத்தின் முதல் பெண் பிரதமர் ஆவார். முன்னாள் வங்காளதேசத்தின் அதிபர் சியவுர் ரஹ்மானின் மனைவியுமாவார்.
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 23ஆம் தேதி டக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
பிறகு நிலைமை மோசமடையவே அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
வங்காளதேசத்தில் கடந்த பிப்ரவரி 2018ஆம் ஆண்டு கலெடா ஸியா சிறை தண்டனையைப் பெற்றார் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


