மலேசிய கிண்ண காற்பந்து போட்டி; இறுதி நிமிட பெனால்டியால் சிலாங்கூர் எஃப் சி அணி வெற்றி

9 பிப்ரவரி 2026, 7:22 AM
மலேசிய கிண்ண காற்பந்து போட்டி; இறுதி நிமிட பெனால்டியால் சிலாங்கூர் எஃப் சி அணி வெற்றி

சிரம்பான், பிப் 9- மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் காலிறுதி சுற்றின் முதற்கட்ட ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில் நேற்றிரவு நெகிரி செம்பிலான், துவாங்கு அப்துல் ரஹ்மான் பாரோயில் நடைபெற்ற ஆட்டத்தில் சிலாங்கூர் எஃப் சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் நெகிரி செம்பிலான் அணியை வீழ்த்தியது

சிலாங்கூர் எஃப் சி அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் மொராய்ஸ் பெனால்டி மூலம் 95ஆவது நிமிடத்தில் சிலாங்கூர் அணிக்கான வெற்றிக்கோலை அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் சிலாங்கூர் எஃப் சி அணி ஒரு கோல் முன்னிலையில் உள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் இரண்டாம் கட்ட காலிறுதி சுற்றில் சிலாங்கூர் எஃப் சி அணி நெகிரி செம்பிலான் அணியை மீண்டும் சந்திக்கவுள்ளது.

இவ்வாட்டம் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.