சிலாங்கூர் எஃப் சி ரசிகர்களின் மோசமான அட்டூழியங்கள்; சிலாங்கூர் சுல்தான் கண்டனம் தெரிவித்தார்

3 பிப்ரவரி 2026, 8:15 AM
சிலாங்கூர் எஃப் சி ரசிகர்களின் மோசமான அட்டூழியங்கள்; சிலாங்கூர் சுல்தான் கண்டனம் தெரிவித்தார்

ஷா ஆலாம், பிப் 3- சிலாங்கூர் எஃப் சி அணியின் ரசிகர்களின் அட்டூழியங்கள் காரணமாக பொது அமைதிக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநில ஆட்சியாளர், மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

சிலாங்கூர் அணியின் ரசிகர்களின் இவ்வாறான போக்கு என்பது தம்மை ஏமாற்றத்திலும் வருதத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் எஃப் சி அணியின் ரசிகர்கள் இடையே ஹுலிகனிஸம் அல்லது கேங்கஸ்டரிஸம் போன்ற நன்நெறியற்ற கலாச்சாரங்கள் அனுமதிக்க முடியாது என்றும் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் கேட்டுக்கொண்டார்.

போலீஸ் தகுந்த தண்டனையை வழங்கவும் இந்த செயல் மற்ற ரசிகர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா குறிப்பிட்டார்.

முன்னதாக பொது அமைதிக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் கோல திரெங்கானுவில் சிலாங்கூர் அணி ரசிகர்கள் ஆராவாரம் கொண்டு நடந்து சென்றதால் சுமார் 33 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் அடங்கிய காணொளி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.