ஷா ஆலம், டிச 1 - மலேசிய எஃப் ஏ கிண்ண காற்பந்து போட்டியிலிருந்து சிலாங்கூர் எஃப் சி அணி வெளியேறியது.
நேற்றிரவு பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் அரக்ங்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சபா எஃப் சி அணி 3-3 என்ற கோல் கணக்கில் சிலாங்கூர் அணி சமநிலை கண்டது.
கூடுதல் நேரம் வழங்கப்பட்டும் இரு அணிகளும் கோல் புகுத்தாத நிலையில் ஆட்டம் பெனால்டி வரை சென்றது.
பெனால்டியில் சபா எஃப் சி அணி 5-4 பெனால்டி கோல் கணக்கில் சிலாங்கூர் எஃப் சி அணியை வீழ்த்தியது.
சபா எஃப் சி அணி இறுதியாட்டத்தில் ஜொகூர் டாருல் தக்ஸிம் அணியுடன் மோதவுள்ளது.
மலேசிய எஃப் ஏ கிண்ண இறுதியாட்டம் டிசம்பர் 14ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடக்கவுள்ளது.


