ஐரோப்பிய சாம்பியன் லீக் காற்பந்து ஆட்டம் - லிவர்பூல் வெற்றி

10 டிசம்பர் 2025, 8:33 AM
ஐரோப்பிய சாம்பியன் லீக் காற்பந்து ஆட்டம் - லிவர்பூல் வெற்றி

மிலான், டிச 10- ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணியினர் வெற்றி பெற்றனர். சான் சிரோ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் இந்தர்மிலான் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தர்மிலான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

லிவர்பூல் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 88ஆவது நிமிடத்தில் டோமினிக் அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் செல்சி அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் அட்லாண்டா அணியிடம் தோல்வி கண்டனர். டோட்டன்ஹாம் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்லாவியா பராகுய் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை லிவர்பூல் அணி இதுவரை ஆறு முறை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.