கல்வி மனிதநேயத்துடன் சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்

5 பிப்ரவரி 2026, 8:02 AM
கல்வி மனிதநேயத்துடன் சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்

ஷா ஆலம், பிப் 5: நாட்டின் முன்னேற்றத்தை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் குறுகிய நிபுணத்துவம் மூலம் மட்டுமே அளவிட முடியாது, மாறாக மனித மதிப்புகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மனிதநேயத்தின் உருவாக்கத்துடன் சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுபடுத்தியுள்ளார்.

கல்வி முறை வரலாற்றிலிருந்தும், நாட்டின் நாகரிகத்தை வடிவமைக்கும் மதிப்புகளிலிருந்தும் துண்டிக்கப்பட்டு, தொழில்நுட்பத் துறைகளில் மட்டுமே சிறந்து விளங்கும் ஒரு தலைமுறையை உருவாக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

பல்கலைக்கழகங்கள் பல்வேறு அறிவுத் துறைகளை ஒன்றிணைக்கும் இடமாக செயல்பட வேண்டும், வெறும் தொழிலாளர்களை உருவாக்கும் தொழிற்சாலைகளாக இயங்க கூடாது என்றார் பிரதமர்.

எதிர்காலத் தலைமையை அறிவுசார் ஆணவத்தின் அடிப்படையில் கட்டமைக்க முடியாது, மாறாக கருணை மற்றும் நாட்டிற்கான பொறுப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொழில்நுட்ப முன்னேற்றம் மனித விழுமியங்களால் வழிநடத்தப்பட வேண்டும், இதனால், மனிதர்கள் தங்கள் சொந்த அடையாளத்திலிருந்து அந்நியப்பட மாட்டார்கள் என செயற்கை நுண்ணறிவின் (AI) சவால் குறித்து கருத்து தெரிவித்தார் அன்வார்,

துங்கு அப்துல் ரஹ்மான் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (TAR UMT) உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.