ஜோம் ஷோப்பிங் ஹரி ராயா ஐடில்ஃபித்ரி திட்டத்திற்காக மாநில அரசு RM8 மில்லியனை ஒதுக்கியுள்ளது - பாப்பாராய்டு

3 பிப்ரவரி 2026, 9:13 AM
ஜோம் ஷோப்பிங் ஹரி ராயா ஐடில்ஃபித்ரி திட்டத்திற்காக மாநில அரசு RM8 மில்லியனை ஒதுக்கியுள்ளது - பாப்பாராய்டு

ஷா ஆலம், பிப் 3: இந்த ஆண்டு ஜோம் ஷோப்பிங் ஹரி ராயா ஐடில்ஃபித்ரி திட்டத்திற்காக மாநில அரசு RM8 மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் அதிக அளவில் உதவிகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காகக், கடந்த ஆண்டு பெறப்பட்ட RM7.2 மில்லியனுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று வீ.பாப்பாராய்டு கூறினார்.

RM3,000க்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகளில் அடிப்படைத் தேவைகளை வாங்க உதவும் வகையில், ஒரு நபருக்கு RM200 மதிப்புள்ள ஜோம் ஷோப்பிங் பெராயன் வவுச்சர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டு, மாநில அரசு இந்த திட்டத்திற்காக RM18.48 மில்லியனை ஒதுக்கியுள்ளது. இதில் கடந்த ஆண்டை விட கூடுதலாக RM2 மில்லியன் அடங்கும். இதன் மூலம் சீனப்புத்தாண்டு, ஹரி ராயா ஐடில்ஃபித்ரி மற்றும் தீபாவளி பண்டிகைகளைக் கொண்டாடும் 92,400 பெறுநர்கள் பயனடைவார்கள்.

கூடுதலாக, மாநில அரசு 8,317 முன்னாள் படைவீரர்களுக்கு RM200 மதிப்புள்ள ஜோம் ஷாப்பிங் ஹரி பஹ்லாவன் நெகாரா வவுச்சர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இதற்கு RM1.7 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.