இங்கிலாந்து பிரிமியர் லீக் ஆட்டங்களின் முடிவுகள்; மென்செஸ்டர் யுனைடெட், லிவர்புல் அணிகள் வெற்றி 

3 பிப்ரவரி 2026, 8:44 AM
இங்கிலாந்து பிரிமியர் லீக் ஆட்டங்களின் முடிவுகள்; மென்செஸ்டர் யுனைடெட், லிவர்புல் அணிகள் வெற்றி 

லண்டன், பிப் 3- இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண ஆட்டங்கள் வார இறுதி நாட்களில் நடைபெற்றது. 

கடந்த வாரம் நடைபெற்ற ஆட்டங்களில் மென்செஸ்டர் யுனைடெட் அணி ஃபுல்ஹெம் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்று புள்ளிகளை வெற்றிக்கொண்டது. 

மற்றொரு ஆட்டத்தில் லிவர்புல் அணி நியூகாஸ்டல் யுனைடெட் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த ஆட்டம் லிவர்புல் அணியின் சொந்த அரங்கான அன்ஃபில் அரங்கில் நடைபெற்றது. 

இதர ஆட்டங்களில் மென்செஸ்டர் சிட்டி அணி டோட்டென்ஹம் அணியுடன் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டனர். 

இந்த பருவத்திற்கான இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் வேட்கையில் களமிறங்கியிருக்கும் அஸ்டன் வில்லா அணி எதிர்பாராத விதமாக ப்ரைன்ஃபோர்ட் அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். 

இங்கிலாந்து பிரிமியர் லீக் புள்ளிப்பட்டியலில் அர்சனல் 53 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் மென்செஸ்டர் சிட்டி, அஸ்டன் வில்லா ஆகிய அணிகள் முறையே 47 மற்றும் 46 புள்ளிகளுடன் இரண்டாம் மூன்றாவது இடத்தில் உள்ளனர். 

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.