கோத்தா கெமுனிங் காற்பந்துப் போட்டி - இளம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்தது

23 நவம்பர் 2026, 7:16 AM
கோத்தா கெமுனிங் காற்பந்துப் போட்டி - இளம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்தது
கோத்தா கெமுனிங் காற்பந்துப் போட்டி - இளம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்தது

கோத்தா கெமுனிங், நவ 23 : கோத்தா கெமுனிங் சட்டமன்ற மக்கள் சேவை மையம், மித்ரா (MITRAA) அரசாங்க சார்பற்ற அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்த காற்பந்து கிண்ணப் போட்டியில் , அத்தொகுதியைச் சுற்றிய ஏழு தொடக்கப்பள்ளிகள் பங்கேற்றன.

மாணவர்களிடையே விளையாட்டுத் திறன், ஒற்றுமை, குழு உணர்வு மற்றும் விளையாட்டு ஒழுக்கத்தை வளர்ப்பதுடன், இளம் காற்பந்து வீரர்களின் திறமைகளை அடையாளம் காணும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டது.

“இப்போட்டி வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு களம் மட்டுமல்ல. மாறாக, மாணவர்களிடையே ஒழுக்கம், குழு உணர்வு, ஒற்றுமை மற்றும் விளையாட்டு மனப்பான்மையை வளர்க்கும் ஒரு சிறந்த தளமாக அமைந்தது" என கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதன் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து விளையாடுவதையும், தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதையும் காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நமது இளம் தலைமுறையினரிடம் ஏராளமான விளையாட்டுத் திறமைகள் உள்ளன. அவர்களுக்கு முறையான வாய்ப்புகளையும் ஆதரவையும் வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை அடையச் செய்ய முடியும்,” என்றாரவர்.

செக்க்ஷன் 27 (1) தேசிய ஆரம்பப் பள்ளிக்கூட காற்பந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இடத்தைப் பிடித்து வெற்றியாளர் பட்டத்தை வென்றது.

போட்டி முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பிரகாஸ் சிறப்பு விருதுகளையும் எடுத்து வழங்கினார்.

இப்போட்டி கடந்த நவம்பர் 21 -ஆம் தேதி ஷா ஆலாம், செக்க்ஷன் 17, JKR பொதுப் பணித் துறையின் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.