சிலாங்கூரில் உள்ள பல சிறுவர்கள் அதிக உடல் எடை பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர்

3 பிப்ரவரி 2026, 5:01 AM
சிலாங்கூரில் உள்ள பல சிறுவர்கள் அதிக உடல் எடை பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர்

ஷா ஆலம், பிப் 3: ஜூலை 2025இல், ASAS திட்டம் மூலம் சிலாங்கூரில் உள்ள பல சிறுவர்கள் அதிக எடை மற்றும் உடல் பருமன் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

481 சிறுவர்களில் உடல் பருமன் குறியீடு (BMI) பரிசோதனையில், 273 பேர் மட்டுமே ஆரோக்கியமான உடல் எடையைக் கொண்டிருந்ததாகவும், மீதமுள்ளவர்கள் எடை குறைவாக, அதிக எடை அல்லது பருமனாக அடையாளம் காணப்பட்டதாகவும் பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

மொத்தம் 87 சிறுவர்கள் உடல் எடை குறைவாக இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் 52 பேர் அதிக எடை கொண்டவர்கள் மற்றும் 69 பேர் உடல் பருமனாக இருப்பது தெரிய வந்தது.

"இந்த முடிவுகள் ஊட்டச்சத்து ஆலோசனை மற்றும் சிறுவர்களுக்கு மிகவும் பொருத்தமான ஆரோக்கியமான வாழ்க்கை முறை உட்பட ஆரம்ப நடவடிக்கை எடுக்க உதவுகின்றது," என அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

ASAS என்பது ஒரு சுகாதார பரிசோதனை திட்டம் மட்டுமல்ல, ஊட்டச்சத்து நிபுணர்களின் வழிகாட்டுதல் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தேவைகளையும் வளர்ச்சியையும் புரிந்துகொள்ள உதவுகிறது என்று ஜமாலியா கூறினார்.

"இந்த திட்டம் சிறுவர்களின் உடல்நலப் பிரச்சனைகளைக், குறிப்பாக உடல் பருமனை முன்கூட்டியே தடுப்பதிலும் கவனம் செலுத்துகிறது," என்று அவர் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.