ஷா ஆலம், பிப் 1 — இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளில் சுமார் 10,315 வணிக உரிமங்களுக்குச் சிப்பாங் நகராண்மை கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.
வணிக நடவடிக்கைகள் சட்டப்பூர்வமாகவும், ஒழுங்காகவும், விதிமுறைகளுக்கு இணங்கவும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அதன் உரிமத் தேவைகளுக்கு ஏற்ப இந்த ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிப்பாங் நகராண்மை கழகத் தலைவர் அனி அகமட் கூறினார்.
“தங்கள் வணிக உரிமங்களைப் புதுப்பிக்கத் தவறும் வர்த்தகர்கள், துணைச் சட்டங்களின் கீழ் அதிகபட்சமாக RM1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்,” என்று சிப்பாங் நகராண்மை கழகம் தெரிவித்தது.
இதற்கிடையில், இந்த ஆண்டு 12 இடங்களில் 611 வர்த்தகர்களுக்கு 657 ரம்டான் பஜார் இடங்களை சிப்பாங் நகராண்மை கழகம் வழங்கியுள்ளது என்று அனி கூறினார். இதில் சைபர்ஜெயா, சிப்பாங், டெங்கில் மற்றும் பண்டார் பாரு சாலாக் திங்கி ஆகிய இடங்கள் அடங்கும்.
“மேலும், தகவலுக்குப் பொதுமக்கள் எம்பிஏஜே உரிமம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறையை 03-4285 7344 / 7170 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


