F1 பந்தயம்: செபாங், கோலா லங்காட்டில் களைகட்டும் சுற்றுலா

2 அக்டோபர் 2026, 2:47 AM
F1 பந்தயம்: செபாங், கோலா லங்காட்டில் களைகட்டும் சுற்றுலா
F1 பந்தயம்: செபாங், கோலா லங்காட்டில் களைகட்டும் சுற்றுலா

ஷா ஆலாம், அக் 2 : இவ்வார இறுதியில் நடைபெறும் 'F1 கல்ஃப் ஏர் பஹ்ரைன் கார் பந்தையத்தை முன்னிட்டு, உள்நாட்டு , வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளின் வருகை, செப்பாங் மற்றும் கோலா லங்காட் சுற்றியுள்ள சுற்றுலாத் துறை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

செபாங் அனைத்துலக பந்தயத் தளத்துக்கான (SIC) பார்வையாளர்களின் வருகை, உள்ளூர் சுற்றுலா மேம்பாட்டாளர்கள், அப்பகுதியிலுள்ள பல்வேறு சுற்றுலா ஈர்ப்புத் தளங்களை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கும் என்று, சிலாங்கூர் ஊராட்சி சுற்றுலாத்துறை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ங்கு சூ லிம் தெரிவித்தார்.

பந்தயத்தைக் காண்பதற்கு முன்னரும் பின்னரும் சிலாங்கூரைச் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க சுற்றுலா மேம்பாட்டாளர்கள் தயாராக உள்ளனர் என்று அவர் கூறினார்.

"செப்பாங் டிராகன் பழப் பண்ணை மற்றும் கம்பங் பாரு செபாங் ஆகியவற்றுடன், கோலா லங்காட் மாவட்டத்தில் அமைந்துள்ள டோங் ஜென் கோவிலும் (Dong Zen Temple) பயணிகளை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.

மேலும் இயற்கை அழகையும் உள்ளூர் கலாச்சாரத்தையும் அனுபவிக்க சைபர்ஜெயாவிற்கு ஒரு நாள் பயணமும் மேற்கொள்ளலாம்," என்று அவர் 'மீடியா சிலாங்கூர்' ஊடகத்திடம் தெரிவித்தார்.

தமக்கு கிடைத்த தகவலின் படி, இந்த பந்தயத்தை ஒட்டி சுற்றுலாப் பயணிகளின் வருகையால் செபாங்கைச் சுற்றியுள்ள தங்கும் விடுதிகல் தற்போது முழுமையாக நிரம்பும் தருவாயில் உள்ளன என்றார்.

"சுற்றுலாப் பயணிகள் பந்தயத்தைப் பார்ப்பதுடன், சிலாங்கூரைச் சுற்றிப் பார்க்கவும், இங்கு தங்கி, உணவுகளைச் சுவைத்து, பொருட்களை வாங்கி, தங்களின் செலவினங்களை சிலாங்கூரிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.

இதன் மூலம் இந்த பந்தயத்தின் பலன்களை மேலும் பல பகுதிகளும் இங்குள்ள வணிகர்களும் பெற முடியும்." என்றாரவர்.

இந்த அனைத்துலகப் பந்தயம், உள்நாட்டு, வெளிநாட்டு பார்வையாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் செபாங்கிற்கு பெருமளவில் ஈர்க்குமென எதிர்பார்க்கப்படுவதாக செபாங் மாநகராட்சி மன்ற உறுப்பினர் விக்டர் சோங் வூன் ஃபெய் (Victor Chong Voon Fei) தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகள், இந்த மூன்று நாள் பந்தயக் காலத்தைப் பயன்படுத்தி செபாங் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைச் சென்று பார்க்குமாறு அவர் ஊக்குவித்தார்.

செபாங் டிராகன் பழப் பண்ணை, கம்புங் பாரு செப்பாங், கம்புங் பாரு சுங்கை பெலெக், சைபர்ஜெயா மற்றும் ஜெஞ்சாரோமில் உள்ள டோங் ஜென் கோவில் ஆகிய சுற்றுப் பார்க்க சிறந்த இடங்களாக அமையும் என அவர் கூறினார்.

"எனக்குத் தெரிந்தவரை, இந்த அனைத்துலகப் பந்தயத்தை ஒட்டி, மிட்சுயி அவுட்லெட் பார்க் (Mitsui Outlet Park) மற்றும் அதன் சுற்றுப்புற சுற்றுலாத் தளங்களும் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன.

எனவே அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், தவறவிடக் கூடாது," என்றார்.

இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை, F1 கல்ஃப் ஏர் பஹ்ரைன் மலேசியா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், செபாங் அனைத்துலக பந்தயத் தளத்தில் நடைபெறுகின்றது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.