கோலாலம்பூர், ஜனவரி 28 -தீபகற்ப மலேசியாவில் டீசலின் சில்லறை விலை ஜனவரி 29 முதல் பிப்ரவரி 4 வரை நான்கு சென் உயர்ந்து ஒரு லிட்டருக்கு RM2.92 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, சபா, சரவாக் மற்றும் லாபுவான் பகுதிகளில் டீசல் விலை அதே காலகட்டத்தில் ஒரு லிட்டருக்கு RM2.15 ஆகவே தொடரும்.
RON97 மற்றும் RON95 பெட்ரோல் வகைகளின் சில்லறை விலைகளும் முறையே ஒரு லிட்டருக்கு RM3.10 மற்றும் RM2.54 ஆக மாற்றமின்றி நீடிக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கிடையில், BUDI 95 திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படும் RON95 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு RM1.99 ஆகவே பராமரிக்கப்படும்.
“உலகளாவிய கச்சா எண்ணெய் விலை போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்,” என்று அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


