மூன்று மலேசியர்கள் மும்பை விமான நிலையத்தில் கைது

27 ஜனவரி 2026, 4:25 AM
மூன்று மலேசியர்கள் மும்பை விமான நிலையத்தில் கைது

மும்பை, ஜன 27 - குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று மலேசியர்கள் ஞாயிற்றுக்கிழமை மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மலேசியாவின் Op Jack Sparrow விசாரணையுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

வன்முறைக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் மலேசியப் காவல்துறையால் தீவிரமாக தேடப்பட்டு வந்த அந்த மூவரும், இதுநாள் வரை வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்தவர்கள்.

முன்னதாக, மான்செஸ்டர் விமான நிலையத்தில் வந்திறங்கிய மூவரும், அதிக ஆபத்தான நபர்கள் எனக் கூறி பிரிட்டன் குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்டு, மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தவர்கள், அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த 48 மணி நேரங்களில் மலேசியக் காவல்துறை படையின் சிறப்புக் குழு மும்பைக்குச் செல்லும். கைதானவர்கள் மலேசியா திரும்பியதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.