யாயாசான் எம்பிஐ பள்ளி உதவிக்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன

27 ஜனவரி 2026, 3:55 AM
யாயாசான் எம்பிஐ பள்ளி உதவிக்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன

ஷா ஆலம், ஜன 27 — நேற்று முதல் யாயாசான் எம்பிஐ பள்ளி உதவிக்கான விண்ணப்பம் திறக்கப்பட்டுள்ளது என அறக்கட்டளைத் தலைவர் அஹ்மட் அஸ்ரி சைனல் நோர் தெரிவித்தார்.

இந்த உதவிக்கு சமூக சேவை மையங்கள் அல்லது மாநில தொகுதி ஒருங்கிணைப்பாளர் மையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

“இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு விண்ணப்பங்கள் திறந்திருக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்குத் தயார்படுத்த உதவும் வகையில் RM100 ரொக்கம் வழங்கப்படும்.

“ஒவ்வொரு மாநிலத் தொகுதிகளிலும் 300 மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவி வழங்கப்படுவதோடு விண்ணப்பதாரர்களின் வீட்டு வருமானம் RM5,000க்கு கீழ் இருக்க வேண்டும்,” என நேற்று நடந்த உதவி வழங்கும் விழாவில் சந்தித்தபோது அஹ்மட் அஸ்ரி கூறினார்.

முன்னதாக, சுமார் ஒரு மில்லியன் மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்களை வழங்குவதற்காக 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட RM20 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக அஸ்ரி கூறினார்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியை கைவிடாமல் இருப்பதை தடுப்பதற்காக இந்த உதவி வழங்கப்படுகிறது.

இந்த உதவிக்கு பதிவு செய்ய, பெற்றோரின் அடையாள் அட்டை மற்றும் அவர்களின் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் அல்லது MyKids போன்ற துணை ஆவணங்களைத் வழங்க வேண்டும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.