தீபகற்ப மலேசியாவில் வெப்பமான வானிலை ஜனவரி 31 வரை தொடரும்

26 ஜனவரி 2026, 9:45 AM
தீபகற்ப மலேசியாவில் வெப்பமான வானிலை ஜனவரி 31 வரை தொடரும்

ஷா ஆலம், ஜன 26: தீபகற்ப மலேசியாவில் வெப்பமான வானிலை ஜனவரி 31 வரை தொடரும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

வானிலை முன்னறிவிப்பு மாதிரிகளின் பகுப்பாய்வின் அடிப்படையில், இந்த நிலைமை பெரும்பாலான இடங்களில், குறிப்பாக வடக்கு தீபகற்ப மலேசியாவில் ஏற்படும் என்று மெட்மலேசியா இயக்குநர் ஜெனரல் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் கூறினார்.

“இதற்கிடையில், ஜனவரி 29 முதல் 31, 2026 வரை சபா, லாபுவான் மற்றும் சரவாக்கில் காற்று குவியல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்த சூழ்நிலையில் அந்தக் காலகட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்,” என்று அவர் முகநூலில் அறிக்கையில் தெரிவித்தார்.

அந்த காலகட்டத்தில் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

சமீபத்திய மற்றும் மிகவும் துல்லியமான தகவல்களுக்கு www.met.gov.my என்ற வலைத்தளத்தையும் மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தையும் நாடவும். மேலும், myCuaca செயலியைப் பதிவிறக்கவும் செய்யவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.