ஷா ஆலம், ஜன 26: கடந்த வெள்ளிக்கிழமை, சுங்கை பெட்டாணி, ஜெனியாங்கில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நபர் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் அந்நபரின் முகம், கழுத்து மற்றும் மார்பில் தீக்காயங்கள் ஏற்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாகk குருன் காவல்நிலைய அதிகாரிகளுக்கு அதிகாலை 3.15 மணி அளவில் ஒரு பெண்மணியிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்ததாகக் கோலா மூடா துணை மாவட்டk காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ஹன்யான் ரம்லான் கூறினார்.
சிற்றுண்டிசாலை ஊழியராகப் பணிபுரியும் பாதிக்கப்பட்டவரின் உடலில் சுமார் 11 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டதாக அவர் கூறினார். இச்சம்பவம் தொடர்பில் ஓட்டுநராகp பணிபுரியும் 36 வயதுள்ள ஆடவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
“இந்த சம்பவம் பொறாமையால் ஏற்பட்டது என ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது,” என்று ஹன்யான் ரம்லான் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
ஆபத்தான பொருளைப் பயன்படுத்தி கடுமையான காயம் ஏற்படுத்தியதற்காக குற்றவியல் சட்டப்பிரிவு 326 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் தற்போது சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில் (HSAH) சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேல் விசாரணைகளுக்கு உதவுவதற்காகத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.


