இந்தோனேசிய மாஸ்டர்ஸ் 2026: நாட்டின் மகளிர் இரட்டையர் பெர்லி தான் - எம்.தீனா ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம் 

23 ஜனவரி 2026, 4:08 AM
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் 2026: நாட்டின் மகளிர் இரட்டையர் பெர்லி தான் - எம்.தீனா ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம் 
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் 2026: நாட்டின் மகளிர் இரட்டையர் பெர்லி தான் - எம்.தீனா ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம் 

ஜகார்த்தா, ஜன 23- ஜாகார்த்தாவில் உள்ள இஸ்டோரா செனாயன் மைதானத்தில் நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டுக்கான இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில், மலேசியாவின் முன்னணி மகளிர் இரட்டையர் ஜோடியான பெர்லி டான் - எம். தினா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில், உலகின் இரண்டாம் நிலை ஜோடியான இவர்கள் தைவானின் லின் சியாவ் மின் - வாங் யு சியாவ் இணையை 21-13, 21-12 என்ற நேர் செட்களில் 48 நிமிடங்களில் வீழ்த்தினர்.

காலிறுதிப் போட்டியில் இவர்கள் ஜப்பான் அல்லது தென்கொரிய ஜோடியை எதிர்கொள்ளவுள்ளனர்.அதேபோல், மலேசியாவின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் மான் வெய் சோங் - டீ கை வுன் ஜோடியும் காலிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்திய ஜோடியான ஹரிஹரன் அம்சகருணன் - எம்.ஆர். அர்ஜுன் இணையை 21-17, 9-21, 21-16 என்ற கணக்கில் 54 நிமிடங்கள் போராடி இவர்கள் வென்றனர்.

அடுத்த சுற்றில் இவர்கள் இந்தோனேசியாவின் சபர் கார்யமான் குடாமா - முகமது ரேசா பஹ்லேவி இஸ்பஹானி என்ற வலுவான ஜோடியை எதிர்கொள்ள உள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில், மலேசியாவின் கே. லெட்சனா கனடாவின் மிச்செல் லீயை 21-14, 21-14 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.இருப்பினும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மலேசியாவின் நட்சத்திர வீரர் லீ ஜி ஜியா அதிர்ச்சித் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

தாய்லாந்தின் பானிட்சபோன் டீராட்சாகுலிடம் 21-15, 17-21, 8-21 என்ற கணக்கில் அவர் தோல்வியைத் தழுவினார். அதேபோல, கலப்பு இரட்டையர் பிரிவில் ஹூ பாங் ரோன் - செங் சு யி ஜோடி சீனாவின் குவோ சின் வா - சென் ஃபாங் ஹுய் இணையிடம் 13-21, 19-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.a

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.