தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலைக்கு இலவச பேருந்து சேவை; கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் அறிவிப்பு

22 ஜனவரி 2026, 4:15 AM
தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலைக்கு இலவச பேருந்து சேவை; கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் அறிவிப்பு

ஷா ஆலம், ஜனவரி 22- எதிர்வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, கோத்தா கெமுனிங் தொகுதி மக்கள் எவ்வித போக்குவரத்து சிரமமுமின்றி பத்துமலைக்குச் சென்று தங்களின் நேர்த்திக்கடன்களைச் செலுத்த ஏதுவாக இலவச பேருந்து சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலேசியா மடாணி மற்றும் 'கித்தா சிலாங்கூர்' திட்டத்தின் கீழ், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரகாஷ் சம்புநாதன் இந்தச் சிறப்பு முயற்சியை முன்னெடுத்துள்ளார்.

இந்த இலவச பேருந்து சேவையானது வரும் 2026, ஜனவரி 31-ஆம் தேதி, சனிக்கிழமை இரவு 8.00 மணி அளவில் கோத்தா கெமுனிங் தொகுதியின் மூன்று முக்கிய இடங்களில் இருந்து புறப்படும். 

தாமான் ஸ்ரீ மூடா கோயில் வளாகம் (Perkarangan Kuil Taman Sri Muda), MPP மண்டலம் 14 அலுவலக வளாகம் (Perkarangan Pejabat MPP Zon 14) மற்றும் ஆலாம் மேகா கோயில் வளாகம் (Perkarangan Kuil Alam Megah) ஆகிய இடங்களில் இருந்து பேருந்து புறப்படும். 

இந்தச் சேவையைப் பயன்படுத்த விரும்பும் பொதுமக்கள் முன்கூட்டியே பதிவு செய்வது அவசியமாகும். உங்கள் பெயர், அடையாள அட்டை எண் (IC Number), தொலைபேசி எண் மற்றும் உங்களுடன் வரும் பயணிகளின் எண்ணிக்கை ஆகிய விவரங்களை +6011-12575460 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணிற்கு அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கோத்தா கெமுனிங் தொகுதி மக்கள் கூட்ட நெரிசலைத் தவிர்த்து, பாதுகாப்பான முறையில் பத்துமலைக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாண்புமிகு பிரகாஷ் சம்புநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.