பேரா மாநிலத்தில அரசாங்க நிலங்களில் கட்டப்பட்டுள்ள மேலும் இரு ஆலய நில விவகாரங்களுக்கு தீர்வு பிறந்தது- டத்தோ அ. சிவநேசன் தகவல்

20 ஜனவரி 2026, 7:49 AM
பேரா மாநிலத்தில அரசாங்க நிலங்களில் கட்டப்பட்டுள்ள மேலும் இரு ஆலய நில விவகாரங்களுக்கு தீர்வு பிறந்தது- டத்தோ அ. சிவநேசன் தகவல்

ஈப்போ, ஜன 20- ஈப்போ கம்போங சீமி எனும் இடத்தில் தாமான் பிந்தாங் பாலும், தாமான் மிரின்டியில் உள்ள அருள்மிகு கன துர்கை அம்மன் ஆலயம், ஈப்போ தாமான் மாணிக்கவசகம் குடியிருப்பில் உள்ள மதுரை வீரன் ஆலயம் பல ஆண்டுகள் நிலப்பிரச்சனையை எதிர்நோக்கி வந்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக இன்று காலையில் மாநில அரசாங்க செயலகத்தில் மாநில நில அலுவலகம் மற்றும் ஆலய பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் இந்த விவகாரத்திற்கு தீர்வு பிறந்துள்ளது என்று பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் இந்தியர் விவகாரங்களுக்கான செயற்குழு தலைவருமான டத்தோ அ.சிவநேசன் தெரிவித்தார்.

மாநில அரசாங்க நிலங்களில் கட்டபட்டுள்ள ஆலயங்களை அகற்ற நில அலுவலம் நடவடிக்கையை மேற்கொண்டது. இம்மாநிலத்தில் அரசாங்க நிலங்களில் கட்டப்பட்ட ஆலயங்களின் நிலப் பிரச்சனைக்கு தீ்ர்வுக் கண்டுள்ளதை அவர் நினைவுக் கூர்ந்தார்..

பேரா மாநிலத்தில் ஒரு ஆலயங்கள் எதிர்நோக்கும் நிலப்பிரசசனைகளுக்கு படிபடியாக தீர்வுக்காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்

மேலும் பேசிய அவர், அடுத்தமாதம் தைப்பூசத் திருவிழா நடைபெறவிருக்கிறது. அவைகள் சிறப்பான முறையில் நடைபெற மாநில அரசாங்கம் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.