வீடு புகுந்து திருட முயன்ற நபர் மாரடைப்பால் மரணம்: காவல்துறை தீவிர விசாரணை!

29 ஜூலை 2026, 2:12 AM
வீடு புகுந்து திருட முயன்ற நபர் மாரடைப்பால் மரணம்: காவல்துறை தீவிர விசாரணை!

ஈப்போ, ஜூலை 29 — ஈப்போ, ஜாலான் பில்டிங் சொசைட்டி, தாமான் ஸ்டார் பகுதியில் நேற்று அதிகாலை நிகழ்ந்த வீடு புகுந்து திருடும் முயற்சியின்போது, 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

பேராக் மாநில காவல்துறை தலைவர் டத்தோ முகமட் அல்வி சைனல் ஆபிடின் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று அதிகாலை 5 மணியளவில் இரு சந்தேக நபர்கள் வீட்டின் சன்னலை உடைத்து உள்ளே நுழைய முயன்றபோது, அங்குள்ள வீட்டுப் பராமரிப்பாளர் அவர்களைக் கவனித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தின்போது ஒரு சந்தேக நபர் அங்கிருந்து தப்பியோட, மற்றொருவரான 40 வயது நபர் சம்பவ இடத்திலேயே சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவர் இறந்துவிட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

இது குறித்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், மாரடைப்பு ஏற்படுவதற்குக் காரணமான இதயக் குழாய் அடைப்பே அவரது மரணத்திற்கு வழிவகுத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இந்தக் வழக்கு திடீர் மரண்மாக (SDR) வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வீடு புகுந்த திருட முயன்ற குற்றத்திற்காகக் குற்றவியல் சட்டப் பிரிவு 457 மற்றும் பிரிவு 324-ன் கீழ் காவல்துறையினர் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மற்றொரு சந்தேக நபரைத் தேடும் முயற்சியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள் ஈப்போ மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 05-2451500 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.