மெட்ரிட், ஜன 13- ஸ்பெயின் லா லீகா கிண்ணத்தின் பலம் பொருந்திய அணியாக கருதப்படுவது ரியல் மெட்ரிட் அணி. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ண அதிகமுறை வென்ற அணியாகவும் ரியல் மெட்ரிட் அணி திகழ்கிறது.
இந்நிலையில், ரியல் மெட்ரிட் அணியின் நிர்வாகி பொறுப்பிலிருந்து ஸ்காபி அலொன்சோ தற்போது விலகியுள்ளார்.
ஸ்பெனிஷ் கப் போட்டியின் இறுதியாட்டத்தில் ரியல் மெட்ரிட் அணி அதன் பரமவைரியான பார்சிலோனா அணியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த நிலையில் அலொன்சோ இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.
தற்போது ரியல் மெட்ரிட் அணியின் நிர்வாகியாக அல்வாரோ அர்பியோலா நியமிக்கப்பட்டுள்ளார்.
லா லீகா போட்டியில் ரியல் மெட்ரிட் அணி நான்கு புள்ளிகள் வேறுபாட்டில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.


