கிம் பான் கோன் தலைமையிலான சிலாங்கூர் அணி அதன் முதல் வெற்றியைப் பதிவு செய்தது

12 ஜனவரி 2026, 8:12 AM
கிம் பான் கோன் தலைமையிலான சிலாங்கூர் அணி அதன் முதல் வெற்றியைப் பதிவு செய்தது

ஷா ஆலாம், ஜன 12- கிம் பான் கோன் தலைமையிலான சிலாங்கூர் எஃப் சி அணி அதன் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

சிலாங்கூர் எஃப் சி அணி DPMM எஃப் சி அணியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இவ்வாட்டம் ஸ்டேடியம் நெகாரா ஹசானால் போல்கியா அரங்கில் நடைபெற்றது.

இதற்கு முன் சிலாங்கூர் எஃப் சி அணி ஜொகூர் அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.

சிலாங்கூர் அணிக்கு தற்போது முன்னாள் ஹரிமாவ் மலாயா பயிற்றுநர் கிம் பான் கோன், அவ்வணியின் தலைமை பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மலேசிய சூப்பர் லீக் போட்டியில் சிலாங்கூர் எஃப் சி அணி 28 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இதுவரை 9 வெற்றி, 4 தோல்வி மற்றும் ஒரே ஒரு சமநிலையைப் பெற்றுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.