தென் அர்ஜெண்டினாவில் கடுமையான காட்டுத் தீ; 15 ஆயிரம் ஹெக்டர் நிலம் அழிந்தன

12 ஜனவரி 2026, 4:34 AM
தென் அர்ஜெண்டினாவில் கடுமையான காட்டுத் தீ; 15 ஆயிரம் ஹெக்டர் நிலம் அழிந்தன

புனொஸ் அய்ரெஸ், ஜன 12- தென் அர்ஜெண்டினாவில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டு கிட்டத்தட்ட 15 அயிரம் ஹெக்டர் நிலம் அழிந்தன. அந்நாட்டின் சுபுட் மற்றும் சந்தா கிருஸ் ஆகிய பிராந்தியங்கள் பெருவாரியாக பாதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

கடந்த திங்களன்று இந்த காட்டுத்தீ ஏற்பட்டு அர்ஜெண்டினாவின் அன்டெஸ் மலைப்பகுதியில் ஏறக்குறைய 11,980 ஹெக்டர் நிலைப்பரப்பை அழித்தன.

இந்த காட்டுத்தீ குறித்து சுபுட் கவர்னர் இக்னாசியோ தொர்ரெஸ் கூறுகையில் காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது என்று அவர் கூறினார்.

பருவநிலை மாற்றம் தொடர்பாக அனைவரும் இதனை எளிதில் எடுத்து கொள்ள வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தினார்.

இந்த காட்டுத்தீயை அணைக்க 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு, மீட்புப்படை, போலீஸ் மற்றும் ஊழியர்கள் அனைவரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.