டென்னீஸ் வீரர் நோவக் ஜோகோவிச் அடிலெய்ட் போட்டியிலிருந்து விலகல்; ஆஸ்திரேலிய ஓப்பனில் கவனம்

6 ஜனவரி 2026, 7:08 AM
டென்னீஸ் வீரர் நோவக் ஜோகோவிச் அடிலெய்ட் போட்டியிலிருந்து விலகல்; ஆஸ்திரேலிய ஓப்பனில் கவனம்

வாஷிங்டன். ஜன 6- மெல்போர்ன் பார்க்கில் நடைபெறவுள்ள இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டிக்குத் தயாராவதில் கவனம் செலுத்துவதற்காக, நோவக் ஜோகோவிச் அடுத்த வாரம் அடிலெய்ட்டில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

2023ஆம் ஆண்டில் அடிலெய்ட் அனைத்துலகப் பட்டத்தை வென்ற அவர், சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஓர் அறிக்கை மூலம் இந்த முடிவை அறிவித்தார்.

மெல்போர்ன் பார்க்கில் தனது 11வது ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தையும் 25வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வெல்ல ஜோகோவிச் இலக்கு வைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னீஸ் போட்டி ஜனவரி 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெறும்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.