ஸ்கிம் மெஸ்ரா வவுச்சர் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது

5 ஜனவரி 2026, 8:53 AM
ஸ்கிம் மெஸ்ரா வவுச்சர் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஷா ஆலம், ஜன 5: ஸ்கிம் மெஸ்ரா வவுச்சர் திட்டம் (கட்டம் 1/2026) தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்) அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு மீண்டும் அறிவிக்கப்படும்.

இந்த ஒத்திவைப்பு தற்காலிகமானது என்றும், வவுச்சர் கோரிக்கை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் ஸ்கிம் மெஸ்ரா உறுப்பினர்கள் பொறுமையாக காத்திருக்குமாறும் யாவாஸ் முகநூல் பதிவில் கேட்டு கொண்டுள்ளது.

ஸ்கிம் மெஸ்ரா வவுச்சர் திட்டத்தின் கட்டம் 1/2026 கோரிக்கை தொடர்பான தகவல்கள் யாவாஸின் அதிகாரப்பூர்வக் குறுஞ்செய்தி சேவை (SMS) மூலம் உறுப்பினர்களுக்கு அனுப்பப்படும்.

இத்திட்டம் தொடர்பான எந்தவொரு சமீபத்திய தகவல்களையும் பெற ஸ்கிம் மெஸ்ரா உறுப்பினர்கள் எப்போதும் அதிகாரப்பூர்வ வலைத்தளமான mesra.yawas.com.my நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக ஒத்திவைப்பு காலம் முழுவதும் ஸ்கிம் மெஸ்ரா உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மற்றும் பொறுமைக்கு அறக்கட்டளை தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.