ஏப்ரல் முதல் ஜூன் வரை பிறந்த சிலாங்கூர் மூத்த குடிமக்கள் மெஸ்ரா திட்ட 2026 ஆம் ஆண்டுக்கான பற்றுச்சீட்டுகளை பெறலாம்

1 ஏப்ரல் 2026, 4:27 AM
ஏப்ரல் முதல் ஜூன் வரை பிறந்த சிலாங்கூர் மூத்த குடிமக்கள்  மெஸ்ரா திட்ட  2026 ஆம் ஆண்டுக்கான பற்றுச்சீட்டுகளை பெறலாம்

மூத்த குடிமக்களுக்கான மெஸ்ரா திட்டம் (SMUE) மற்றும் சிறப்புத் தேவையுடையோ-ருக்கான மெஸ்ரா திட்டம் (SMIS) ஆகியவற்றின் 2026 ஆம் ஆண்டுக்கான பற்றுச்சீட்டு கோரிக்கை இன்று முதல் தொடங்குகிறது. இது ஏப்ரல் முதல் ஜூன் வரை பிறந்த உறுப்பினர்களுக்கானது.

இந்தக் கோரிக்கை ஏற்கனவே உள்ள உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று சிலாங்கூர் மரபுடைமை அறக்கட்டளை (YAWAS) தெரிவித்துள்ளது. உறுப்பினர்கள் தங்களின் வாக்குப்பதிவு பகுதிக்குட்பட்ட மாநில சட்டமன்ற சேவை மையங்களில் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். சரிபார்ப்பு நோக்கங்களுக்காக உறுப்பினர்கள் தங்களது அசல் அடையாள அட்டையுடன் நேரில் வர வேண்டும்.

இதற்கிடையில், இந்தத் திட்டத்திற்கான புதிய பதிவுகள் இன்னும் திறக்கப்படவில்லை.

மெஸ்ரா திட்டம் மற்றும் பற்றுச்சீட்டு கோரிக்கை தொடர்பான கூடுதல் தகவல்களை
mesra.yawas.com.my என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது 03-5481 8800 என்ற எண்ணில் YAWAS-ஐத் தொடர்புகொண்டு பெறலாம்.

சிலாங்கூர் 2026 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (OKU) பயனடையும் இந்த மெஸ்ரா திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு 55 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

//mediaselangor.com/ms/2026/04/350137

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.