ஷா ஆலம், ஜனவரி 5: பந்திங், கோலா லங்காட்டில் உள்ள ஒரு துரித உணவு விடுதிக்கு வெளியே நேற்று இரவு ஒரு நபர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் காயமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பரவிய சில புகைப்படங்கள் மற்றும் காணொலிக் காட்சிகளின்படி, அந்த நபர் கட்டிடச் சுவருக்கு அருகில், உணவு விடுதிக்கு வெளியே மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்துள்ளது. உணவு விடுதியின் சுவரில் இரத்தம் படிந்திருந்ததற்கான தடயங்களும் காணப்பட்டன. இது சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கருத்துகளைத் தூண்டியுள்ளது.
அதே காணொலிக் காட்சியில், உணவு விடுதி வளாகத்தின் தரையில் குறைந்தது இரண்டு துப்பாக்கியின் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதும் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், கோலா லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முஹமட் அக்மல்ரிசல் ராட்ஸி, இந்தச் சம்பவம் மற்றும் விசாரணையின் முன்னேற்றம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.


