பிலிப்பைன்ஸில் மிதமான நிலநடுக்கம் பதிவு

20 டிசம்பர் 2025, 6:00 AM
பிலிப்பைன்ஸில் மிதமான நிலநடுக்கம் பதிவு

கோலாலம்பூர், டிச 20 - நேற்று பிலிப்பைன்ஸில் உள்ள மின்டனாவ் (Mindanao) பகுதியில் 5.0 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு துறையான மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

மதியம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் நகரத்திற்கு கிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்ததுடன், 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த நிலநடுக்கம் மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தாது எனவும் மெட்மலேசியா அறிவித்துள்ளது.

கடந்த சில காலங்களாக பிலிப்பைன்ஸின் பல பகுதிகளில், தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் பதிவாகி வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு அதிகாரிகள் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்ற நிலையில் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.