இரவில் சிலாங்கூர் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை

12 டிசம்பர் 2025, 8:53 AM
இரவில் சிலாங்கூர் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், டிச 12 இன்று இரவு 8 மணி வரை சிலாங்கூர் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்புள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

இதே வானிலைதான் கோலாலம்பூர், புத்ராஜெயா, கெடா, பினாங்கு, பேராக், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், பகாங், ஜோகூர், லாபுவான், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்துறை கூறியது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் இருக்கும் போது எச்சரிக்கைகள் வெளியிடப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை எச்சரிக்கைகள் என்பது ஒரு வெளியீட்டிற்கு ஆறு மணி நேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகும் குறுகிய கால எச்சரிக்கைகள் ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு http://www.met.gov.my, சமூக ஊடக வலைத் தளத்தைப் பார்க்கவும், myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.