மோசடியால் பாதிக்கப்பட்ட 32 மலேசியர்கள் நாடு திரும்புகிறார்கள்

9 டிசம்பர் 2025, 9:27 AM
மோசடியால் பாதிக்கப்பட்ட 32 மலேசியர்கள் நாடு திரும்புகிறார்கள்

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 9- மியன்மார் – தாய்லாந்து எல்லைப் பகுதியில், மோசடிச் செயல்களால் பாதிக்கப்பட்டு சிக்கித் தவித்த 32 மலேசியர்களைத் தாய்லாந்து இராணுவம் பத்திரமாக மீட்டு, அடைக்கலம் கொடுத்துள்ளது.

அவர்கள் அனைவரும் நாளை மலேசியா திரும்புவார்கள் என மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

தூதரகம் சார்பில் விடுக்கப்பட்ட மனிதநேய உதவிகளுக்கான கோரிக்கையைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தாய்லாந்தின் எல்லை நகரமான Mae Sot-க்கு அழைத்துச் செல்லப்பட்டு, சோதனைகளுக்குப் பிறகு மலேசியா திரும்புவார்கள் என வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், மியன்மார் நாட்டின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள, மேலும் 21 மலேசியர்களும், நாளை மலேசியா திரும்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.