வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு 1,000-க்கும் மேற்பட்ட தற்காலிக நிவாரண மையங்கள் (PPS) தயாராக உள்ளன —சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்

29 நவம்பர் 2025, 9:00 AM
வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு 1,000-க்கும் மேற்பட்ட தற்காலிக நிவாரண மையங்கள் (PPS) தயாராக உள்ளன —சிலாங்கூர்  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்
வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு 1,000-க்கும் மேற்பட்ட தற்காலிக நிவாரண மையங்கள் (PPS) தயாராக உள்ளன —சிலாங்கூர்  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்
வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு 1,000-க்கும் மேற்பட்ட தற்காலிக நிவாரண மையங்கள் (PPS) தயாராக உள்ளன —சிலாங்கூர்  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்

சிப்பாங், நவம்பர் 29 — வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த சிலாங்கூர் மாநில அரசு 1,000-க்கும் மேற்பட்ட தற்காலிக நிவாரண மையங்களை (PPS) தயாராக வைத்துள்ளதாக மாநில ஆட்சிக்குழு  உறுப்பினர் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை பொறுப்பாளருமான ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

இன்று SK சாலாக் நிவாரண மையத்தில் வெள்ள இடம் பெயர்வோரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது அந்த மையங்களில் சுமார் 5 விழுக்காடு மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாகவும், சிப்பாங்கில் ஒன்பது மையங்கள் மட்டும் திறக்கப் பட்டுள்ளதாகவும் கூறினார்.

சிப்பாங்கில் உள்ள SK கம்போங் பாரு லஞ்சுட் நிவாரண மையத்தில் அதிகபட்சமாக 297 பேரும், SK சாலாக் மையத்தில் 182 பேரும் தங்க வைக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.“மாநில முதலமைச்சர் (டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி) இதுகுறித்து மிகவும் அக்கறை கொண்டுள்ளார்.

நிலையை நேரில் ஆய்வு செய்து பாதிக்கப் பட்டவர்களின் தேவைகளை அறிந்து கொள்ள அனைத்து ஆட்சிக் குழு  உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.“கர்ப்பிணிப் பெண்கள், முதியோர் உள்ளிட்ட பல பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களது கவலைகளைக் கேட்டறிந்தேன். இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டுக்கான வெள்ள மேலாண்மைக்கு மாநில அரசு ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர்களுக்கு விளக்கினேன்” என்று அவர் கூறினார்.

சமூக நலத்துறையின் இன்போபெஞ்சானா இணையதள தகவலின்படி, இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி சிலாங்கூரில் 33 நிவாரண மையங்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன. இதில் 1,227 குடும்பங்களைச் சேர்ந்த 4,433 பேர் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

அதில் கோலா சிலாங்கூர்  14, சிப்பாங்கில் 9, கோலா லங்காட்டில் 5, சபாக் பெர்ணமில் 3, கிள்ளானில் 2 மையங்கள் செயல் படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

“இடம் பெயர்ந்தவர்கள் முழுமையாக பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை மையங்கள் மூடப்படமாட்டா” என்று அவர் உறுதியளித்தார். வெள்ளப் பிரச்சினைகளுக்கு மாநில அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும், நீண்டகால தீர்வாக வெள்ளத் தணிப்புத் திட்டங்களை செயல் படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் ஜமாலியா கூறினார்.

இதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொகுதி மக்களிடம் தெரியப் படுத்துமாறு மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அனைத்து நிவாரண மையங்களிலும் நிலையான செயல்முறை விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும், தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்கூட்டியே செய்யப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெள்ள காலம் முழுவதும் பயன்படுத்த 300-க்கும் மேற்பட்ட தளவாட வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் 200 படகுகள் உட்பட அனைத்தும் மாநில அரசால் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன என்று ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.